செவ்வாய் பெயர்ச்சி ; தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசிகள் எவை தெரியுமா?
செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு செவ்வாய் நுழைவது என்பது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனால் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர்.

தொட்டதெல்லாம் துலங்கப்போகும் ராசிகள்
மேஷம்: பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படலாம். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நன்மை கிட்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சிம்மம் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடனான உறவுகள் மேம்படும். மாணவர்கள் கல்வி மற்றும் பிற துறைகளில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலைகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் திறக்கப்படும்.
துலாம் : உடன் பிறந்தவர்கள், சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். சொத்து சேரும் வாய்ப்புகளும் உண்டு. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் தைரியமாக முதலீடு செய்தால் லாபகரமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம் : வருமானம் அதிகரிக்கும். அவர்கள் விரும்பிய அனைத்தும் நடக்கும். பெற்றோர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியான நன்மைகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்கலாம். தாமதமாகி வந்த சம்பள உயர்வு கிடைக்கும்.
மீனம்: பதவி உயர்வு, விருதுகள், நல்ல வருமானம், சொத்துக்கள், லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மேம்படும். அரசியல், அரசுத் துறைகள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும்.