பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (08) ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' மட்டத்தில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு, மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.