சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் 4 ஆபத்தான நோய்கள்
தற்போது சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், பெற்றோர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா, கை, கால் மற்றும் வாய் நோய், மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நோய்கள் குறித்து விழிப்புடன் இருப்பதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பெற்றோர், பாடசாலைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், தலைவலி, கண் வலி, உடல் வலி, மூட்டு வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு. பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், பெற்றோர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
இருமல், சளி, உடல் வலி மற்றும் மூட்டு வலி. பிள்ளைகளுக்கு காய்ச்சலுடன் இருமல், சளி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு போதிய ஓய்வு அவசியம். அவர்கள் பாடசாலை, முன்பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால், மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முகக்கவசம் (Face Mask) அணிவது கட்டாயமாகும்.
இது 'கொக்சாக்கி' வைரஸால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் இது மற்றக் குழந்தைகளுக்குப் பரவுகிறது. கால்கள், முழங்கைகள் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு புள்ளிகள் தோன்றுதல். சில பிள்ளைகளுக்கு நீர் நிரம்பிய கொப்புளங்கள் ஏற்படலாம்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை 3 முதல் 4 நாட்களுக்கு வீட்டிலேயே வைத்திருக்குமாறும், உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குமாறும் பெற்றோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நோய் மாசுபட்ட உணவு மற்றும் சுவாசப் பாதை வழியாகப் பரவக்கூடியது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை (ஒவ்வாமை), உரத்த சத்தங்களை வெறுத்தல் மற்றும் உடல் வலி.
இந்நோய் அபாயத்தைக் குறைக்க, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடித்தல் மற்றும் இருமல், சளி இருக்கும் போது முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், பிள்ளைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.