சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்கள் கைது!
அநுராதபுரம் பழைய பஸ் தரிப்பிடம்,அநுராதபுரம் நுவரவெவ நீர் தேக்க பகுதிகளில் விலைமாதர்கள் ஏழு பேரை அநுராதபுரம் கோட்டப் பிரிவு குற்றப் புலனாய்வு பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண்கள் 25வயதுக்கும் 40வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது. கைதானவர்கள் அநுராதபுரம், கல்கமுவ, சிலாபம், மதவச்சி,கம்பொல பளுகஸ்வெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் விலைமாதர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பண்டார விஜேயகோன் ஆலோசனையின் பேரில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.