ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் உயிரிழப்பு...10 பேர் வைத்தியசாலையில்
கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

10 பேர்வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் பல, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை சேர்ந்தவை என்றும், மோதல் நடந்தபோது அவை அப்பகுதியில் சென்று கொண்டிருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.