துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது
வியாழக்கிழமை (20) ஜா-எல, உஸ்வெட்டிகேயாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
நீர்கொழும்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு உஸ்வெட்டிகேயாவாவில் உள்ள மோர்கன்வட்டா கடற்கரையில் 29 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்படதக்கது.