நாட்டை விட்டு ஓடிவிட்டாரா பசில் ? வெளியான குழப்பமான தகவல்!
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பரபரப்பு தகவலை அடுத்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த N 750 GF தனியார் ஜெட் விமானத்தில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 10.40 மணிக்கு பசில் சென்ற விமானம் டுபாய்க்குப் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது இலங்கையில் இருந்து டுபாய்க்கு விமானங்கள் இல்லாத காலம் இது என விமானிகள் தகவல் கூறுகின்றனர்.
அதேவேளை தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பொய்யை பரப்பிய பசில் ராஜபக்ச, லங்கா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்தார் எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் பசி ராஜபக்ச கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிருந்த நிலையில், தற்ப்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை மக்கள் மத்தியில் குழப்பநிலையைல் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி
தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை; பசிலின் நிலமை என்ன?
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        