நிதியமைச்சின் உயரதிகாரி இராஜினாமா
நிதியமைச்சின் கீழுள்ள முதலீட்டு , வர்த்தக கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதீப் குமார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பு விடயம் தொடர்பில், திறைசேரி செயலாளருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவர் பதவி விலகியதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அந்த செயற்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி தேவையென மேற்படி பணிப்பாளர் நாயகம் வாதிட்டதால் , திறைசேரி செயலாளருக்கும் இவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து வரி திருத்தங்களை செய்வதற்கு திறைசேரி செயலாளரின் வாய்மூல உத்தரவை மாத்திரம் பின்பற்ற முடியாதென கூறி முதலீட்டு, வர்த்தக கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயக பதவியை பிரதீப் இராஜினாமா செய்ததாகவும் தெரியவந்துள்ளது.