பொதியொன்றில் இருந்து மெத்தபெட்டமைன் கண்டெடுப்பு
பொதியொன்றில் இருந்து மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஜேர்மனியில் இருந்து அங்கொட பகுதிக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் அஞ்சல் மதிப்பீட்டுப் பிரிவில் கடமையாற்றும் உதவி சுங்க அத்தியட்சகர் வெளிநாடுகளில் இருந்து அஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொதிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பொதி தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த பொதியில் 2387 கிராம் எடை கொண்ட 4956 மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவை மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவற்றின் சந்தைப் பெறுமதி 49.56 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கவுள்ளனர்.