பெரும் தொகையான டொலர், யூரோ பறிமுதல்! சிக்கிய சந்தேக நபர்
வெலிகமவில் பெருந்தொகையான டொலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்ததாக கருதப்படும் சுமார் ஒரு கோடியே 67 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நபர் கைதுசெய்யப்பட்டார்.
கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெலிகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.