அனந்தியை கொச்சைப்படுத்தும் வைரலாகும் வீடியோ! யார் இந்த இளைஞன்?
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் திரைப்படம் இயக்குவதற்காக மட்டும் கிளிநொச்சி வரவழைக்கப்பட்ட இயக்குனர் சீமான் அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்திருந்தார் பின்னர் அது தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
இந்த சூழ்நிலையில் அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், திரைப்படம் இயக்க மட்டுமே சீமான் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டார் என்ற உண்மையை கூறியிருந்தார்.
இதனால் கொதிப்படைந்த நாம் தமிழர் கட்சியினர் அனந்தி சசிதரனை வறுத்தெடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படியான வீடியோக்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் வீடியோவை இங்கு அழத்திப் பார்க்கவும்