நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.
பாதுகாப்பு கோரிக்கை
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இது தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இன்னும் ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பாக எந்த கோரிக்கைகளையும் வைக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை, சம்பந்தப்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், தேவைப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.