இலங்கை வந்தடைந்தார் இந்தியா வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
வரும் 5ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கிருப்பாரென வெளிவிவகார அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது. இந்த விஜயமானது நாட்டின் வெளிவிவகத்துறை செயலாளர் ஜயநாத் கொலம்பகாவின் அழைப்பிற்கமைய இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் அவர் இளநகையில் உள்ள நாடுகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஜனாதிபதி,பிரதமர்,நிதியமைச்சர் உள்ளிட்டோரையு சந்தித்து பேசவுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அவர் கண்டி,திருகோணமலை மற்றும் யாழ்ப்பணம் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
