சீமான் நாக்கை அறுத்துவிடுவேன்; பகிரங்கமாக மிரட்டல்
காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் மலைகளை தகர்த்தி கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுவதாககூறி தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரபல யூ டியூப்பருமான சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீதும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.
அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இழிவு படுத்தும் வகையில் சீமான் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக பேசியவர், எந்த மாவட்டங்களுக்கு சென்றாலும் அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் சாதிக்காரன் என சீமான் சொல்லிக்கொள்கிறார்.
காங்கிரஸ் காரர்களை இழிவாக பேசுவதை நிறுத்தால்விட்டால் அவரது நாக்கை அறுப்பேன் என பெண்கள் சிலர் இருந்தபோதும் திரவியம் கூறியிருந்தமி அங்கிருந்த செய்தியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.