சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை சீருடைகள்
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் நேரடித் தலையீட்டின் பேரில் சீன அரசாங்கம் நாட்டின் 80% பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனாவினால் இரண்டு கட்டங்களாக 9,259,258.75 மீற்றர் துணிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும், முதற்கட்டமாக 5,803,478 மீற்றர் துணிகள் கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென் ஹொங் (Xi Zhang Hong) இனால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இன்று (11.01.2024) கல்வி அமைச்சின் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், சீன மானியத்தின் மூலம் பெறப்பட்ட எஞ்சிய சீருடைத் துணிகள் எதிர்வரும் (05.02.2024) ஆம் திகதி இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.