விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை பாலத்தில் முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாணவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர் பொல்வத்த மருத்துவமனையில் இருந்து பலபிட்டிய மருத்துவமனைக்கும் பின்னர் காலி தேசிய மருத்துவமனைக்கும் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதிக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.