தொடர் கொள்ளையில் பாடசாலை மாணவன்; பறிபோன பாட்டியின் உயிர்
பெலியத்தை பகுதியில் மூதாட்டி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த மூதாட்டியின் பேரனான பாடசாலை மாணவர் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் 15 வயதுடையவர் எனவும் இவர் பாடசாலையின் மாணவ தலைவனாகவும் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் விசாரணையில் அமபலமான தகவல்
கடந்த 17ஆம் திகதி மாணவனின் பாட்டி வீட்டில் உயிரிழந்த நிலையில் இது தொடர்பில் பேரன் கிராம அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் . கிராம அதிகாரியின் அறிவுறுத்தலின்படி பேரன் பெலியத்தை பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் .
மூதாட்டியின் இறுதிச்சடங்கு கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அயல் வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
அது தொடர்பில் மூதாட்டியின் பேரனிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர் . பொலிஸாரின் விசாரணையில் தானே தங்க நகைகளை திருடியாதாக மாணவர் ஒப்புக்கொண்டார் .
அதோடு பாட்டியின் கழுத்தில் இருந்த தங்க நகையையும் தான் திருடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருத்தார் . தகவலுக்கமைய அயல் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
இந்நிலையில் மூதாட்டியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார் . இதனைதொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) தோண்டி எடுக்கப்படவுள்ளது .
மேலும் சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .