இலங்கையில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்காக பாடசாலை!
அம்பாறையில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கான பாடசாலையை ஸ்தாபிக்கும்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ Harin Fernando அந்த பிரதேச உள்ளூராட்சி மன்றத்தை கோரியுள்ளார்.
மேலும், சுற்றுலாத்துறை பணியாளர்களின் தேவைகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது உடனடியாக 3,000 பயிற்றப்பட்ட நானாவித சுற்றுலாத்துறை பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அம்பாறையின் அறுகம்பே பிரதேசத்திற்கு வருகை தந்த அவர் கடல் வாநூர்தி இறங்குதுறை நிர்மாணத்திற்கான மதிப்பீட்டினை தமக்கு சமர்ப்பிக்கும்படி, பிரதேச செயலாளரை கோரியுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் பலதரப்பினருடன் கலந்தாலோசித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.