புலமைப்பரிசில் விவகாரம் ; மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் ஆராய்ந்த நீதியசர்கள் ஆயம் விசாரணையை இன்றைய தினம் ஒத்தி வைத்துள்ளனர்.
மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கான புள்ளிகளை இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ள நிபுணர் குழு, அதனுடன் தொடர்புபட்ட முழு விடயங்களையும் கருத்திற் கொள்ளாது அறிக்கை தயாரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இந்த பரீட்சையில் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதனால் முழு மாணவ சமூகமும் பாதிப்புக்குள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த வினாத்தாள் தொடர்பான பரீட்சை நடத்தப்பட வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் ஆயம் விசாரணையை இன்றைய தினம் ஒத்தி வைத்துள்ளது