கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைக்கும் சவூதி; பெரும் நெருக்கடிக்கு செல்லும் ஆசியா நாடுகள்!
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் யாழை சேர்ந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம்; துயரத்தில் முடிந்த கொண்டாட்டம்
ஆசிய பிராந்தியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
இந்த முடிவினால்ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெற்றோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும்.
இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிசக்தி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.