சரிகமப இசை மோடையில் இணைந்த இலங்கைத் தமிழர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தருணம்
தென்னிந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சரிகமப மேடையில் இலங்கையில் இருந்து சென்ற பாடகர்களான கில்மிஷா, விஜயலோஷன் மற்றும் இந்திரஜித் ஆகியோர் சங்கமம் சுற்றில் இணைந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றனர்.
மேலும், விஜயலோஷனின் பாடல் சனிக்கிழமை ஒளிபரப்பான நிலையில் கில்மிஷாவின் பாடல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.
நிகழ்ச்சியின் நீளம் கருதி இந்திரஜித்தின் பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட வில்லை.
சங்கமம் சுற்றில் கில்மிஷாவுடன் இணைந்து கார்த்திக் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
ஈழத்து குயில் கில்மிஷாவுடன் கார்த்திக் பாடி முடித்த பிறகு தான் வாழ்க்கையில் திசை மாறிய நெகிழ்ச்சியான தருணம் தொடர்பில் பேசினார்.
கில்மிஷாவுடன் ரீல் போட்ட பிறகு தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாக குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அவருடன் பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கார்த்தி பேசியுள்ளார்.
இதனையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.