சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்!
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Saregamapa Li’l Champs Season 4 இன் போட்டியாளர்களில் ஒருவராக கனடாவாழ் ஈழத்து சிறுமி யாதவி உள்ளார்.
இந்நிலையில் , மேடையில் பாடிகொண்டிருக்கையில் யாதவியின் தாய் மற்றும் சகோதரிகள் கனடாவில் இருந்து தன்னை காண வந்ததை எதிர்பார்க்காத நிலையில், மேடையில் யாதவி கதறி அழ, சரிகமப நடுவர்கள் மட்டுமல்லாது அரங்கத்தில் இருந்தவர்களும் கண்ணீர் வடித்துள்ளனர்.
சரிகமப லிட்டில் சீசன் 4
சரிகமப பாடல் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. தமிழகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது உள்ளது. காரணம் நிகழ்ச்சியில் ஈழத்து தமிழர் குழந்தைகளும் உள்ளவாகப்படுவதே ஆகும் .
அந்தவகையில் தற்போது நடைபெற்றுவரும் சரிகமப லிட்டில் சீசன் 4 இல் , இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட கனடாவாழ் யாதவி கலந்துகொண்டுள்ளார்.
சர்ப்பிரைஸாக வந்த தாயும் சகோதரிகளும்
இந்நிலையில் Saregamapa Li’l Champs Season 4 Dedication Round தற்போது நடைபெறுகின்றது. போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை மிக அழகாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் அழகு நிலவே எனும் பாடலை, ஈழத்து சிறுமி யாதவி பாடுகையில், கனடாவில் இருந்து சர்ப்பிரைஸாக வந்த தாயையும் சகோதரிகளையும் கண்டு கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்கும் , அன்புக்கும் நாம் என்றும் கடமைப்பட்டவர்கள் என Saregamapa Li’l Champs Season 4 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பாடகர் சீனிவாஸ் கூறியமை நெகிழவைத்துள்ளது.