சரத் பொன்சேகா இராணுவத்தினரிடம் அவசர வேண்டுகோள்
பாதுகாப்பு படையினர் ரணில்விக்ரமசிங்க வழங்கும் சட்ட விரோத அரசமைப்பிற்கு முரணான உத்தரவை செவிமடுக்காது பின்பற்ற கூடாது என சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு ரணில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார் தன்னை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார் என பொன்சேகா தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் வதந்திகள் பரவுகின்றன.
முப்படையினரும் பொது மக்களிற்கும் இடையில் மோதல் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஊழல் அரசியல்வாதிகளிற்கு எதிராக சட்டத்தை பின்பற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில் ஆயுதங்களை உயரத்துமாறும் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video
இத் தருணத்தில் நான் போராட்டத்தில் நிற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.