இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே தூங்க மாட்டிங்க
பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம்.
அஜீரண கோளாறு
அஜீரண கோளாறு கொலஸ்ட்ரால் லெவலை உயர செய்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட உடனே தூங்குவது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். மேலும் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே படுப்பது அல்லது தூங்குவதால் உணவு குடலில் தங்கி ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
எடை அதிகரிக்கும்
இது அசிடிட்டியை அதிகரித்து சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தூக்கத்தின் போது உடல் செயல்பாடு குறைகிறது. இதன்படி பார்த்தால் சாப்பிட்ட உடனேயே தூங்க சென்றால், உடல் குறைவான கலோரிகளையே எரிக்கிறது, இதன் விளைவாக எடை அதிகரிக்கும். இது நாளடைவில் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு அதிகரிக்கும்
அதே போல உணவிற்கு பிறகு உடனே தூங்குவது உடலில் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தும் செயல்முறையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் அளவை பாதிக்கிறது. இதன் விளைவாக நீரிழிவு நிலை வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியத்தை குறைக்கும்
குறிப்பாக அசதி மற்றும் சோர்வு காரணமாக பலரும் சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.