கணேமுல்ல சஞ்சீவ கொலை: மூன்று சந்தேக நபர்கள் தடுப்பு காவலில்
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவால் நேற்று (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மூன்று சந்தேக நபர்களையும் விசாரிக்க 24 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதற்காக மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், மீதமுள்ள சந்தேக நபர் துப்பாக்கியை வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி அளித்து, முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.