சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சியால் ராஜ வாழ்க்கையை பெற போகும் ராசிக்காரர்கள்
சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரும் கிரகமாகும். மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். மேலும் சனி கிரகம் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியும் ஆவார்.
தற்போது வருகிற ஜூலை 13, 2025 அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி கதியில் பயணிக்கப் போகும் சனி அடுத்து நவம்பர் 28 வரை இதே நிலையில் தான் நகருவார்.
இந்தப் பெயர்ச்சியின் காரணமாக, 5 மாதங்களுக்கு பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப் போகிறார் சனி பகவான். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். உங்கள் செலவுகளுடன் ஒப்பிடும்போது உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமை நிலைத்திருக்கும். உங்கள் வீட்டிற்கு பல வசதிகளும் ஆடம்பரப் பொருட்களும் வரக்கூடும். சமூகத்தில் உங்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்லலாம். சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.
கடகம்
சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏராளமான ஆசீர்வாதத்தை தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமண நடக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பு மழை பொழியும். மனம் ஆன்மீகத்தை நோக்கி நகரக்கூடும். வீட்டில் சில சுப அல்லது நல்ல நிகழ்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வியாபாரத்தில் பல பெரிய நன்மைகளைப் பெறலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
மகரம்
சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் மகர ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும். இந்த 5 மாத காலத்தில், மகர ராசிக்காரர்கள் பல வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வேலைகள் தானாகவே வெற்றிபெறத் தொடங்கும். அதுமட்டுமின்றி உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். அதனுடன் அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.