சனி - சுக்கிரன் இணைவால் அதிர்ஷ்டத்தை பெறபோகும் ராசிக்காரர்கள்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் திகதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளாரர் இதனால், கும்ப ராசியில் சனி சுக்கிரன் இணைவு உருவாகும். இந்த அற்புதமான சேர்க்கை காரணமாக 2025 புத்தாண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் தரும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
சனி மற்றும் சுக்கிரனின் இணைவு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்தின் உதவியும் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வணிக கூட்டாளரின் ஆதரவைப் பெறுவீர்கள்
கடகம்
சனி மற்றும் சுக்கிரனின் இணைவு கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைக்கு வரது என முடிவெடுத்த பணம் கூட திரும்பக் கிடைக்கும். புதிய பண ஆதாரங்கள் திறக்கப்படலாம். கடக ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
துலாம்
சுக்கிரன் மற்றும் சனியின் இந்த இணைவு துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
சனி மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கை மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தரும். வியாபாரத்தில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும்.