காந்தி ராட்டையில் நூல் நூற்ற சனத் ஜெயசூரிய!
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சுற்றுலா மேம்பாட்டு தூதுவரான முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூற்று மகிழ்ந்துள்ளார்.
இது குறித்து சனத் ஜெயசூரிய தனது டுவிட்டர் பதிவில்,
It was one of the most humbling experience to go to the great Mahatma Gandhi ashram. His life still inspires us. “The future depends on what we do in the present”, applies to Sri Lanka more than ever now. pic.twitter.com/mCNfglZq0O
— Sanath Jayasuriya (@Sanath07) August 20, 2022
மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குச் செல்வது மிகவும் எளிமையான அனுபவங்களில் ஒன்றாகும். அவருடைய வாழ்க்கை இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது.
"நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் தங்கியுள்ளது", இது முன்னெப்போதையும் விட இலங்கைக்கு தற்போது பொருந்தும் எனவும் காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றார் சனத் ஜெயசூரிய பதிவிட்டுள்ளார்.