பிக்பாஸ் தர்க்ஷன் கைது தொடர்பில் முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பாஸ் தர்க்ஷன் நேற்றையதினம் (4) சென்னையில் கைது செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறால் , பிக்பாஸ் தர்க்ஷன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வளவு வேகமாக சட்டம் தன் கடமையை செய்யுமா?
இந்நிலையில் தர்க்ஷன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. இது தொடர்பில் நடிகை சனம் செட்டி பதிவில்,
என் நண்பர்கள் அனைவரும் தர்ஷன் கைது என்ற செய்தியை எனக்கு ஷேர் செய்தார்கள் . அதை பார்த்ததும், சத்தியமாக எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால் பல துரோகங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
இதனால், இந்த செய்தியை கேட்டு நான் ஒரு தடவை மகிழ்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு சாதாரண பெண் தானே. ஆனால், இன்னொருத்தருக்கு நடக்கும் அநியாயத்தில், என்னுடைய நியாயத்தை நான் தேட முடியாது.
இதனால், எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன். தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவருக்காக நான் கூட குரல் கொடுத்து இருப்பேனா? இல்லையா? என்று. நிச்சயமாக நான் குரல் கொடுத்திருப்பேன்.
ஒரு பார்க்கிங் சண்டை இவ்ளோ பெரிய அளவில் பூதாகரமாக ஆக்கப்பட்டு, அதே நாளில் தர்ஷன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்வளவு வேகமாக சட்டம் தன் கடமையை செய்யுமா?
சிசிடிவி ஆதாரம் எங்கே?
அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து இருக்கிறார்கள். ஒரு வழக்கை விசாரித்துவிட்டுத்தான் அரெஸ்ட் பண்ணுவாங்க. ஆனால், இந்த கேசில் எதிர் மனுதாரர் உயர்நீதிமன்ற நீதிபதியோட மகன் என்பதால், இவ்வளவு அவசரமா?
சண்டை நடந்த போது இருந்த சிசிடிவி ஆதாரம் எங்கே? இந்த பிரச்சனைக்கு பின் இருக்கும் உண்மை வெளிவர வேண்டும்.
தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்தால், அது மிகப்பெரிய குற்றம். அதை பண்ண நாங்க விடமாட்டோம் என நடிகை சனம் ஷெட்டி, கைதான தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் நடிகர் தர்க்ஷன், சனம் செட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும், அதன்பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நடிகை சனம் செட்டி பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.