சமுர்த்தி வங்கியில் கொள்ளையிட்ட கும்பல்!
களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்த மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி ஆரியவன்ச செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணைகள் முடியும் வரை வங்கிக்குள் செல்ல எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மடிக்கணினி திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் பணம் மற்றும் பிற உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.