நெறுங்கிய நண்பனை இழந்துவிட்டேன்: மங்கள குறித்து இ.ரா சம்பந்தன் வெளியிட்ட தகவல்
உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவர் மங்கள சமரவீர (Mangala Samaraweera) ஆவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பானது கவலைக்குரியது.
உண்மையான ஒரு இலங்கையராக அவர் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்லவேண்டும் என விரும்பிய ஒருவராவார். அவரோடு எனது உறவு மிகவும் நெருக்கமான ஒன்றாகும்.
இந்த இழப்பினால் நான் மிகவும் வேதனையடைகிறேன், மீள் நிரப்பமுடியாத வெற்றிடத்தினை இவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது. கொள்கைகளுக்காக முன்னின்ற ஒரு உற்ற நண்பனை இழந்துள்ளேன்.
இந்த கவலைமிக்க நேரத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.