தலைமறைவான சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் ஆஜர்; 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) ஆஜராகியுள்ளார்.
விசாரணை ஒன்று தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்வதற்காக சென்று (27) அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது, சமன் ஏக்கநாயக்க வீட்டில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

11 ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.