சால்வையால் பயனில்லை; குடும்ப சின்னத்தை தூக்கிப்போட்ட சமல் ராஜபக்ச!
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சின்னமாகக் கருதப்படும் சிவப்பு சால்வையை அணியாமல் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜபக்ச சால்வையின்றி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து சென்றபோது பத்திரிகையாளர் ஒருவர் அது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “சால்வையால் பயனில்லை. எனக்கு ஆடை வேண்டும்” என்றாராம்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சருக்கு முன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் சால்வை இல்லையே என கேள்வி எழுப்பியதற்கு “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்” எனக் கூறிவிட்டு சமல் ராஜபக்ஷ வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சின்னமாகக் சிவப்பு சால்வை கருதப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபாய தவிர்ந்த ராஜபக்ச குடும்பத்தினர் எப்போது சிவப்பு சால்வையுடனேயே உலாவருகின்றமை குறிப்பிடத்தக்கது.