இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ; வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்
அயோத்தியின் கோவில் நகரமான பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பெரும் குழப்பம் நிலவிய நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பாஜக எம்பி லல்லு சிங்கை 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பது இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பம்.
இன்று (2024.06.04) பாஜக மிகப்பெரிய பெரும்பான்மை அடையாமல், பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது இந்த தேர்தலில் தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்கள் பாஜகவை வீழ்த்த வாக்களித்து இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது
அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் அவதேஷ் பிரசாத் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்.
மேலும் தலித் சமூகத்தை சேர்ந்தவர். பொது தொகுதியில் நின்று, அதுவும் எங்கே பாஜக தங்களுடைய அரசியலின் மையமாக கொண்டுள்ளதோ அங்கே பாஜகவின் தாக்கூர் வேட்பாளருக்கு எதிராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் பார்ப்பன வேட்பாளருக்கு எதிராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் அரவணைத்துக் கொண்டது. அகிலேஷ் யாதவும் அதையே செய்தார். இந்தியாவை காப்பாற்றியது தலித் பகுஜன் ஆதிவாசிகள் தான் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.