முக்கிய தீர்மானத்தை எடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு!
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை Sajith Premadasa வேட்பாளராக நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியதாக கட்சியின் சிரேஷ்டரான சுஜீவ சேனசிங்க Sujeewa Senasinghe தெரிவித்துள்ளார்.
இதனாடிப்படையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணிலின் யோசனையை ஆதரிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அத்தகைய அரசியலமைப்புத் திருத்தத்தை தமது கட்சி முழுமையாக ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார்.