நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா..?
மாம்பழங்கள் பல்வேறு விதமான உடல்நல பயன்களை நமக்கு அளித்தாலும் ஒரு சிலர் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழத் தூண்டு சாப்பிடலாமா என்பது போன்ற சந்தேகங்கள் பலரிடையே இருக்கிறது.
தற்போது மாங்காய் மற்றும் மாம்பழ சீசன் துவங்கி விட்டது. மாம்பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் அது ரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். மாம்பழங்கள் வைட்டமின்கள் A, B, காம்ப்ளக்ஸ், C மற்றும் பாலிபீனால்களின் சிறந்த மூலமாக திகழ்கின்றன.
இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. 56 என்ற மிதமான கிளைசிமிக் எண் கொண்ட மாம்பழங்களை கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் கொண்ட நபர்கள் மிதமான அளவு சாப்பிடலாம்.
ஆனால் அவர்கள் சாப்பிடும் அளவு மற்றும் நேரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விதமான இனிப்பு அளவை கொண்டிருக்கும் என்பதால் இரண்டு முதல் மூன்று துண்டுகள் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும்
இதனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை உடனடியாக அதிகரிக்காது. மாம்பழங்களை நட்ஸ் போன்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது அறிவுறுத்தப்படுகிறது. அதிக கார்போஹைட்ரேட் உணவுகளான சாதம், ரொட்டி, பூரி போன்றவற்றுடன் தவிர்த்து விடவும் .
கூடுதலாக மாம்பழத்துடன் ஒரு சில புரோட்டீன் சாப்பிடுவதும் புத்திசாலித்தனமான யோசனை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு அளவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாம்பழங்களை உங்கள் உணவை சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை கட்டாயமாக ஆலோசிக்க வேண்டும்.
மாம்பழங்கள் இயற்கையான இனிப்பு சுவை கொண்டவை. தேவையற்ற இரத்த சர்க்கரை அதிகரிப்பை தவிர்ப்பதற்கு மாம்பழங்களை மிதமான அளவு சாப்பிடுங்கள்
மாம்பழங்களை அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு சாப்பிடும் பொழுது சர்க்கரை குறைவாக உறிஞ்சப்படும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
மாம்பழங்களை சாப்பிடும் பொழுது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. எனவே ஃபிரஷான மாம்பழங்களை சாப்பிடுவது நல்லது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
சரிவிகித உணவை பராமரிப்பதற்கு அதிக சர்க்கரை நிறைந்த பிற உணவுகளோடு மாம்பழங்களை சாப்பிட வேண்டாம்.
மாம்பழங்களை உங்கள் டயட்டில் சேர்க்கும் பொழுது வழக்கமான முறையில் உங்களுடைய ரத்த சர்க்கரையை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்
மாம்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது ரத்த சர்க்கரை அளவுகள் உடனடியாக அதிகரிக்கும் என்பதால் அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.
அளவு கட்டுப்பாடு
நீங்கள் சாப்பிடும் பொழுது மாம்பழத்தின் அளவில் முழு கவனம் செலுத்த வேண்டும்