ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய சஜித்!
புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (gotabaya Rajapaksa) இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிருந்தார்.
இருப்பினும், ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தாம் நேற்றைய நாளில் முதன் முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.