இடைக்கால அரசுக்கு சஜித், சம்பந்தன், அநுர மறுப்பு!
இடைக்கால அரசுக்கு சஜித், சம்பந்தன், அநுர தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அநுர ம இடைக்கால அரசில் அங்கம் வகிக்கமாட்டோம், அதற்கு ஆதரவும் வழங்கமாட்டோம் என பிரதான எதிர்க்கட்சியான சஜித் தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், உள்ளக மோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களை ஏமாற்றுவதற்காகவுமே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாக அக் கட்சியின் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை இடைக்கால அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணக்கம் தெரிவித்ததாக விமல் வீரவன்ச நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடைக்கால அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.றுப்பு!