ரணிலை கொலை செய்வதே சஜித்தின் திட்டம்! பாலித குற்றச்சாட்டு
கடந்த 9ம் திகதி இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) செயற்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்வதே சஜித் பிரேதமாசவின் திட்டமாக இருந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (14-07-2022) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பதில் ஜனாதிபதி ரணிலின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு எரியூட்டும் நடவடிக்கையை சஜித் பிரேமதாசவே செயற்படுத்தியுள்ளார் என்பது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் சுட்டிநிற்கின்றறன.
சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் இருந்தாலும் அவரது சகோதரி துலாஞ்சனி ஜயகொடி, அவரது மகள், வத்தளை தொகுதி அமைப்பாளர் மற்றும் சிரச ஊடகத்துடன் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஊடாகவே இந்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது.
இந்த சதித்திட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்வதே அவர்களின் திட்டமாகும்.
என்றாலும் அந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும் வீட்டில் இருக்கவில்லை. அதனால் அவர்கள் வீட்டை எரியூட்டி கொள்ளையடித்து சென்றுள்ள