சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன்

Gotabaya Rajapaksa R. Sampanthan Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan protests
By Shankar Jul 19, 2022 04:05 PM GMT
Report

இலங்கையில் சமீப நாட்களாக அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்பால் இலங்கை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.

சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன் | Sajith Ranil Contacted Sampanthan On The Same Day

இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடும் வேட்பாளர்கள்

இந்த நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, (Sajith Premadasa) டலஸ் அழகப்பெரும, (Dullas Alahapperuma) அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன் | Sajith Ranil Contacted Sampanthan On The Same Day

இவர்கள் அனைவரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தங்களுக்கு ஆதரவு கோரி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, (R.Sampanthan) பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் இ.ரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.

சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன் | Sajith Ranil Contacted Sampanthan On The Same Day  

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில் சந்தித்த சஜித் 

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்றைய தினம் (18-07-2022)  மாலை சம்பந்தனின் வீட்டுக்கு நேரில் சென்று சம்பந்தனோடு கலந்துரையாடி தமது ஆதரவினைக் கேட்டுக் கொண்டதாக அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறு சஜித் பிரேமதாச சம்பந்தனின் வீட்டுக்குச் சென்று சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.    

சம்பந்தனின் வீட்டுக்கு சஜித் வருகைத் தந்த போது அங்கு குழுமியிருந்த உறுப்பினர்களில் சாணக்கியன் மட்டும் எழுந்து நின்றார் எனவும் ஏனைய உறுப்பினர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை என்றும் அந்த உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.

சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன் | Sajith Ranil Contacted Sampanthan On The Same Day  

அத்துடன், சுமந்திரன், சஜித் தரப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சஜித் வரும்போது எழுந்திருக்கவில்லை, சுமந்திரன் எப்போதும் இடத்திற்கு இடம் மாறி மாறி நடந்து கொள்வார் எனவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவை அகற்ற கூறும் அமெரிக்கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது . இதன்போது கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,

தற்போதைய பதவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், ரணிலை விலகச் சொல்லி கேட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் எனவும், இருப்பினும் அவரது பேச்சை எவரும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கணக்கில் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சஜிதிற்கு சல்யூட் அடித்த சாணக்கியன் | Sajith Ranil Contacted Sampanthan On The Same Day  

அதேநேரம், சஜித்திற்கும், டலஸூக்கும் வாக்களிப்பதை யாரும் கூட்டத்தில் நியாயப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை தொடர்பில் கூட்டத்தில் சாணக்கியன் பேசிய போது, நான் கூறினேன், போராட்டக்காரர்களின் கோசம் தேசிய அரசு என்பது.

இருப்பினும், தேசிய அரசைப் பற்றி நாங்கள் யோசிக்கத் தேவையில்லை. நாங்கள் வடக்கு கிழக்கை மாத்திரம் தான் யோசிக்க வேண்டும். வடக்கு கிழக்கு பிரச்சினைகளை இந்த வேட்பாளர்கள் தீர்க்க முன்வருவார்களா என்பதைப் பற்றித் தான் நாங்கள் சிந்திக்க வேண்டும் என கூறினேன்.

அத்துடன், போராட்டக் குழுக்களின் பின்னால் வேறு நாடுகள் இருந்ததாக நான் கூறினேன். அதற்கு சுமந்திரன் “நான் அறிந்த வரையில் யாரும் போராட்டக்காரர்களின் பின்னால் இல்லை” என்று தெரிவித்தார்.

எனினும் போராட்டக்காரர்களின் பின்னால் வேறு நாடுகள் இருப்பது என்பதை நான் அறிவேன். சுமந்திரன், சஜித் தரப்புக்கு வாக்குக் கொடுத்துள்ளார் என்று நினைக்கின்றோம், கட்சியில் அனைவருக்கும் இது தெரியும்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருப்பவர்கள் மத்தியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் தரப்புக்கு ஆதரவு வழங்கும் என்ற கதை ஒன்று உள்ளது. மற்றையவர்களுக்கு தெரியும் சுமந்திரனை நம்பி பிரயோஜனம் இல்லை என்று.     

யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. வாக்களிப்பதால் எங்ளுக்கு வரும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இப்படியான கதைகள் வரும்போது சுமந்திரன் எதுவும் கதைக்கின்றார் இல்லை.

அவருக்கு தேவை இந்த போராட்டக் குழு கதையும், ரணில் வெற்றிப் பெறக்கூடாது என்பதில் பலர் தன்னை நம்பியிருக்கின்றார்கள் என்ற கதையுமே அவருக்கு தேவை. ரணில் வெற்றிப் பெறக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் ஒரு கதை கூறுகின்றார்.

சஜித்தும், டலஸூம் சேர்ந்து கேட்டால் கூட, டலஸ் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர். அவருடன் விமல், கம்மன்பில எல்லோரும் இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எப்படி எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

இதன்போது, சிறிதரன், கம்மன்பில போன்றோரை நாங்கள் தனியாட்களாக பார்க்க முடியாது. அவர்களின் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும் என கூறினார் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தினார். 

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US