கம்மன்பிலவிடம் கைகுலுக்கிய சஜித் பிரேமதாச; கட்சிக்குள் சலசலப்பு
உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டமை தொடர்பில் (SJB) தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்று (6) அறிவிக்கவுள்ளது.
இது குறித்து தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில், உதய கம்மன்பில விடுத்த அழைப்பின் பேரில், அரசியல் காரணங்களுக்காக அன்றி, ஈஸ்டர் தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைகளை அறியும் பொதுவான ஆர்வத்தின் காரணமாகவே சஜித் பிரேமதாச பங்கேற்றார்.

SJB க்குள் வெவ்வேறு கருத்துக்கள்
சஜித் பிரேமதாசவின் வருகையானது அந்த நிகழ்வின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகக் கருதப்படக்கூடாது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடான நிலைமைகளைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள கட்சியின் முகாமைத்தவ க் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது என்றார் திஸ்ஸ அத்தநாயக்க .
எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பங்கேற்பு குறித்து SJB க்குள் வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.