எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்த இலங்கை நடிகை!
இலங்கையில் போஷாக்கின்மை காரணமாக சிறுவர்கள் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premedasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு பேருந்து ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரான நடிகை தமிதா அபேரத்னவும் (Damitha Abyerathna) கலந்துக்கொண்டார்.
இதேவேளை, போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எந்த அணியுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அரசாங்கத்தில் இணையுமாறு விடுத்த அழைப்பை நிராகரித்ததாகவும் தமிதா அபேரத்ன அண்மையில் கூறியிருந்தார்.
அரசாங்கத்தில் இணைந்தால், பெருந்தொகை பணத்தை வழங்குவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.