வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் குறித்து சஜித் அதிரடி குற்றச்சாட்டு
இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தற்போது கிட்டத்தட்ட 'அலுவலகக் காவலில்' வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வானிலை அதிகாரிகள் எவரும் வெளியாரை சந்திக்கவோ அல்லது அவர்களுடன் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையை மக்களிடமிருந்து மறைப்பது சரியான செயலல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ளவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் 'தேசிய அனர்த்த மீட்புப் படை' ஒன்றை உருவாக்குமாறு அவர் முன்மொழிந்தார்.
தற்போதைய சூழலுக்கு ஏற்பவும், அனர்த்த முகாமைத்துவத்தை வலுப்படுத்தவும் 'அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தில்' தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.