ஆஷியாவின் தயாருக்கு நிதியுதவி அளித்த சஜித்!
நாட்டில் போதைப் பொருளை ஒழிக்காமல் இந்தப் பேரழிவுகளை நிறுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூக்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டதாகவும், இந்தப் பேரழிவு ஒழியும் வரை இதுபோன்ற அவலங்கள் ஓயாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போது தேசிய பாதுகாப்பு என்பதற்கு பகரமாக ஆங்காங்கே கொலைகள் இடம் பெறுவதையே காணக் கூடியதாகவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சிறப்பு வாய்ந்த வழக்குகளின் சாட்சிகளும் கூட கொல்லப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
பண்டாரகம அட்டலுகம பெரியபள்ளிக்கு முன்பாக வசித்து வந்த வேளையில் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்குச் நேற்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச்சிறுமியின் குடும்பத்தினர் அனைவரிடமும் தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து அட்டலுகம பெரியபள்ளிவாசலுக்கும் வருகை தந்த அவர் மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.