ரம்புக்கைனை சம்பவம்; இறுதிச்சடங்கில் சஜித்!
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலிற்கு எதிர்கட்சித்தலைப்வர் சஜித் பிரேமதாச அஞ்சலி செலுத்தினார்.
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (23) இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று தேவாலேகம, நாரன்பெத்த , ஹிரிவடுன்னேவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.
அதேவேளை இறுதிக் கிரியைகள் முடியும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் உதவியை பெற்றுத்தருமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் பொலிஸாரால் மிலேச்சத்தனமாக துப்பாக்க்கிச்சூடு நடத்தியதி சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிந்தார்.
இந்த சம்பவம் நாடாளாவிய ரீதியில் பெரும் கொந்தளைப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

