யாழில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலைமை: சிக்கிய இளைஞர்கள்
யாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியின் வாக்குமூலத்தின் வாயிலாக பொலிஸார் இரு இளைஞர்கள் கைது செய்துள்ளார் 15 வயது பெண்ணை வன்புணர்வு செய்த வழக்கில் இரு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற 15 வயது சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இரு இளைஞர்களால் வெவ்வேறு நேரங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் நிபுணரின் மருத்துவ அறிக்கைக்காக பாதிக்கப்பட்ட நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 19 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.