சாலையில் தனியாக சிக்கியவர்களை சரமாரியாக சுட்டுகொன்ற ரஷ்யா! பதற வைக்கும் கொடூரத்தின் உச்சம்
உக்ரைனில் உணவுக்காக பாண் வாங்க வரிசையில் நின்ற அப்பாவி மக்கள் 10 பேரை ரஷ்யப் படைகள் கொடூரமாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 22-வது நாளான தாக்குதலை தொடுத்து வருகின்றது. இதேவேளை தலைநகர் கீவ்வில் இருக்கும் 12 மாடிகளைக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய துருப்புகல் பீரங்கி தாக்குதல் நடத்தின.

அந்த தாகுதலில் கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் பெருத்த சேதம் அடைந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், ரஷ்ய துருப்புகள் சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் தலைநகர் கீவை சுற்றிலும் 12 சிறு நகரங்கள் தண்ணீர் இன்றியும், உயிரை உறைய வைக்கிற குளிரில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வெப்ப கருவிகள் இன்றியும் மக்கள் தவித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ரஷ்ய துருப்புகள் சுற்றி வளைத்துள்ள செர்னிஹிவ் நகரில் பாணுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த உக்ரைன் மக்கள் மீது ரஷ்ய துருப்புகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் கொடூரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. இதை கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது. இத்தகைய பயங்கரமான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.