ரஷ்யப் படைகளின் இழிவான செயல்: உக்ரைன் அமைச்சர் அம்பலப்படுத்திய பகீர் தகவல்
உக்ரைன் குடியிருப்புகளில் அத்துமீறி ரஷ்யப் படைகள் பெண்கள், சிறுமிகளிடம் தவறாக நடந்துக்கொண்டதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேப் (Dmytro Kuleb) இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், குடியிருப்புகளில் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனில் ஒருபக்கம் குண்டுமழை பொழியவிட்டு, மறுபக்கம் ரஷ்யப் படைகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற அட்டூழியங்களுக்கு ரஷ்யா கண்டிப்பாக பொறுப்பேற்கும் சூழல் உருவாகும் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே முன்னாள் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown) தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்புக்காக விளாடிமிர் புடின் (Vladimir Putin) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு நீதி கிடைக்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.