உக்ரைனில் ரஷ்யப் படைகளின் கொடூரத்தின் உச்சம்! பதறவைத்த சம்பவம்
உக்ரைனில் 30 குதிரைகளை ரஷ்ய துருப்புகள் உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ஹாஸ்டமெல் என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள் அதை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இதில் அந்த 30 குதிரைகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர், இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய துருப்புகளின் இந்த இரக்கமற்ற செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில்,
போர் தொடங்கியதுமே எனது வீடு மற்றும் லாயத்தை ரஷ்யப் துருப்புகள் ஆக்கிரமித்து விட்டனர். என்னை வீட்டை விட்டு போகுமாறும் அச்சுறுத்தினர். அவ்வாறு வெளியேறாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாகவும் அச்சறுத்தி வந்தனர்.
இந்நிலையில் லாயத்துக்கு தீவைத்து குதிரைகளைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளனர்.