உக்ரைன் ரஷ்யா போர்: மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!
உக்ரைன் மீது ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
மேலும் இந்த போர்ல் களத்தில் ரஷ்யப் படைகளை இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. மேற்கு நாடுகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் 41வது ஒருங்கிணைந்த ராணுவத்தின் தளபதி ஒரு துப்பாக்கி சுடும் வீரரால் சுடப்பட்டார்.
இது மட்டுமின்றி ஒரு படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் ஒரு பிராந்திய தளபதியும் சண்டையில் இறந்துள்ளனர்.
ரஷ்ய தளபதிகள் முன்னோக்கி நகரும்போதே படையின் அதிக கட்டுப்பாட்டை அவர்களால் கொண்டிருக்க முடியும். ஆனால், களத்தில் இப்படி செயல்படும்போது இது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது என்று மேற்கு நாடுகளின் அதிகாரிகள் கூறினர்.